யாருக்கு ஆதரவு...? ஈபிஎஸ், ஓபிஎஸ் - ஐ நேரில் சந்தித்த அண்ணாமலை...!

யாருக்கு ஆதரவு...? ஈபிஎஸ், ஓபிஎஸ் - ஐ நேரில் சந்தித்த அண்ணாமலை...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிவிப்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் உள்ளது. ஆனால், பாஜக இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது. 

ஈபிஎஸ் ஓபிஎஸ் - ஐ சந்தித்த அண்ணாமலை :

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக தரப்பில் இருந்து இரண்டு அணிகளாக போட்டியிடும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியே சந்தித்த அண்ணாமலை,இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

இதையும் படிக்க: ஈபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது...ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு!

இந்த பின்னணியில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இன்று தனித்தனியாக அண்ணாமலை சந்தித்திருப்பது பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை அரசியல் பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். ஈரோடு (கி) இடைத்தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக தங்களது ஆதரவை ஈபிஎஸ்க்கு வழங்குகிறதா? அல்லது ஓபிஎஸ்க்கு வழங்குகிறதா? என்ற கேள்வி இந்த சந்திப்பின் மூலம் எழுந்துள்ளதாகவும், அப்படி இல்லையென்றால் பாஜக இடைத்தேர்தலில் தனியாக நிற்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த சந்திப்பில் இன்னொரு கேள்வியும் அரசியல் மன்றத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்னவென்றால், ஈரோடு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தனது வேட்பாளரை அறிவித்ததால் அதனை பின்வாங்கும் ஆலோசனை வழங்குவதற்காக இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓபிஸ்சை சந்தித்தாரா? அல்லது ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் ஒன்றிணைப்பதற்காக இந்த சந்திப்பா? என்ற கேள்வியும் வட்டமடித்து வருகிறது.  இந்த எல்லா கேள்விகளுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அண்ணாமலை அறிவிக்கும் போது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.