என்னது நஷ்டத்துல இயங்குதா டாஸ்மாக்?

5 ஆண்டுகள் டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது. 

என்னது நஷ்டத்துல இயங்குதா டாஸ்மாக்?

5 ஆண்டுகள் டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகம்,  
2004ம் ஆண்டு அதிகபட்சமாக 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த 2011ம் ஆண்டு 3.56 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு 103.64 கோடியும் 2013ம் ஆண்டு  64.44 கோடியும், 2019ம் ஆண்டு 71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதிக லாபத்துடன் இயங்கி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் 5 ஆண்டுகள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.