நான் என்ன மன்னிப்பு கேட்கணும்..? ஒட்டுமொத்தமாக பதில் கொடுத்த ஆ.ராசா..!

நான் என்ன மன்னிப்பு கேட்கணும்..? ஒட்டுமொத்தமாக பதில் கொடுத்த ஆ.ராசா..!

திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய சர்ச்சை வீடியோ ஒன்றிக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஆ.ராசா பேசியுள்ளார்.

சர்ச்சை:

தனித்த தமிழ்நாடு குறித்தது ஆ.ராசா பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், இந்து மதம் குறித்து அவர் பேசிய மற்றொரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அதில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என பேசியிருந்தார்.

எதிர்ப்பு:

அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகளும், பல இந்து முன்னணி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என, எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும், கைது செய்ய வேண்டும், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் எதிர் கட்சிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆ.ராசா மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

ஆதரவு:

பல எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள் சில அரசியல் கட்சி தலைவர்கள். ராசா பேசியதில் என்ன தவறு, அவர் அவருடைய தனிப்பட்ட கருத்தை கூறவில்லை, மனுதருமத்தில் உள்ளதை தன கூறியுள்ளார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

ஆ.ராசாவின் பேச்சை  எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுவதாகவும், பாஜக - ஆர்எஸ்எஸ்-ன் திரிப்பு பிரச்சாரங்கள் பெரியார் மண்ணில் எடுபடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

என்ன மன்னிப்பு:

இது குறித்து ஆ.ராசா பேசுகையில், "சங்கிகளுக்கு கோபம். இந்துக்களை புண்படுத்திவிட்டார். ஆர்.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை. நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க என பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.