4 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது? கே எஸ் அழகிரி!

4 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது? கே எஸ் அழகிரி!

4 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது? என காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 32 வது நினைவு நாளான இன்று சைதாப்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு 
கே எஸ் அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "இராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று இந்தியாவில் பயங்கரவாதத்தை எதிர்த்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு மேலாக போராடி வருகிறது. பல தோழர்களை இதற்காக இழந்துள்ளோம். காந்தி, இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி என பலரை இழந்தும் இன்று காங்கிரஸ் நிற்கிறது. மத நல்லிணக்கத்திற்கு ஆதரவானது காங்கிரஸ் கொள்கை. மேலும்பிரிவினைக்கு வித்திடக்கூடாது என்ற கொள்கையை கடைபிடித்துள்ளது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக தேர்தலில் பெற்ற வெற்றி ஆர்.எஸ்.எஸ்.க்கு கொள்கைக்கு எதிரான இந்திய மக்கள் ஒற்றுமைக்கு ஆதரவான வெற்றி என்றும்  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார்.

மேலும், 4 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, 2000ரூபாய் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்பதை விளக்கவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் அவர்களின் புதைகுழியினை அவர்களே தோண்டிக்கொள்கிறார்கள் என பாஜக மீது அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிக்க:கள்ளசந்தையில் மதுபானம் வாங்கிக்குடித்த இருவர் பலி!!!