வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது கலைநயமிக்க கற்சிலைகள் கண்டுபிடிப்பு...! பொதுமக்கள் வியப்பு...!

மன்னார்குடி அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது அங்கு பண்டையகால கலைநயமிக்க 5 கற்சிலைகள் கண்டுபிடிகப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருங்கற்சிலைகள் : 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மாளிகைமேடு என்ற பகுதியில் சந்திரசேகர்  என்பவர் வீடு கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பல அடி ஆழத்தில் பள்ளம் தோண்டுகையில்  3 அடி, 2 அடி என பல்வேறு நிலைகளில் கலைநயமிக்க 5 கருங்கற்சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

பொதுமக்கள் கருத்து :

இச்சிலைகள் அனைத்தும் பண்டையக்கால சிலைகள் எனவும், இதில் 2 பெருமாள் சிலைகள், மற்றவை அம்மன் சிலைகள் எனவும் கண்டெறியப்பட்டுள்ளன.  மேலும் அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பண்டையகாலத்து ஆலயம் இருந்திருக்க கூடும் எனவும், அப்பகுதியில் ஆலயத்தின் உற்சவ மூர்த்திகளாக பஞ்சலோக சிலைகள் இருக்கவும் வாய்ப்பு இருக்கலாம் எனவும் பக்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 

மேலும் இத்தகைய சிலைகள் அனைத்தும் மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள் எந்தகாலத்திலானவை என்பது தொல்லியல் துறையினரின் ஆய்வு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.