4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’...சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’...சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், நாமக்கல் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழையும், 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் படிக்க : படம் வரைய பேனா, பென்சில்,.. வேணாமாம்..! நம்ம பசங்க அப்டேட் ஆகிட்டாங்க...! ட்ரோன் -லயே வர்ணஜாலம் பண்றாங்க....!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், கோவையில் ஒரு சில பகுதிகளிலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அங்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.