அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை: அச்சத்தில் உறைந்த பயணிகள்...

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டுயானை பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. 

அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை: அச்சத்தில் உறைந்த பயணிகள்...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களிலேயே யானைகள், காட்டு மாடுகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இந்நிலையில் இன்று காலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை, திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது.

இதனால் அச்சமடைந்த பேருந்து ஓட்டுநர், ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார். பின் யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. ஓட்டுநர் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்தை கட்டுப்படுத்தி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது