சேது சமுத்திரம் திட்டம் அமல்படுத்தப்படுமா? முதலமைச்சர் கூறுவதென்ன!!!

சேது சமுத்திரம் திட்டம் அமல்படுத்தப்படுமா? முதலமைச்சர் கூறுவதென்ன!!!

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் எனக்கூறி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.  

ராமர் சேது பாலம்:

தமிழகத்தில் ராமேஸ்வரம் கடலின் அருகே அமைந்துள்ள ராமர் சேது பாலமானது ஆடம்ஸ் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த பாலம் இலங்கை செல்வதற்காக ராமரால் கட்டப்பட்டது என்று புராண மற்றும் மத நம்பிக்கை உள்ளது.  

ராவணன் சீதையைக் கடத்தி இலங்கைக்கு அழைத்துச் சென்றபோது, ​​அங்கு செல்வதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது என புராணக் கதைகள் கூறுகின்றன.  அதன் எச்சங்கள் இன்றும் அங்கே காணப்படுகின்றன.  

திட்ட காரணம்:

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் எனக்கூறி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.  இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேது கால்வாய் வழியாக வங்கக்கடலை அடையும் வகையில் இத்திட்டம் முன்மொழியப்பட்டது.  

அமைக்கப்படுமா?:

2004ம் ஆண்டு திமுக ஆட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இனியும் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாடு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கும் என முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அனைத்து ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கும் எனவும் முதலமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-நப்பசலயார்

இதையும் படிக்க:  நீட் தேர்வு காரணம் திமுகவா? அதிமுகவா?..... ஸ்டாலின் vs இபிஎஸ்.....