சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறுமா..? சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள்... 

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறுமா..? சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள்... 

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் பேரவை விடுமுறை என்பதால், இன்றைய நிகழ்ச்சிகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்து துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய 4 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. 

அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர். இதனிடையே, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என கூறி, அந்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார் என கூறப்படுகிறது.