போலி கிளினிக் வைத்திருந்த யூடியூப் பிரபலம் சாப்பாட்டு ராமன் கைது...

யூடியூபில் வகை வகையான உணவுகளை உண்டு பிரபலமான சாப்பாட்டு ராமன்,  போலியாக கிளினிக் வைத்து நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி கிளினிக் வைத்திருந்த யூடியூப் பிரபலம்  சாப்பாட்டு ராமன் கைது...

யூடியூபில் வகை வகையான உணவுகளை உண்டு பிரபலமான சாப்பாட்டு ராமன்,  போலியாக கிளினிக் வைத்து நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பொற்செழியன். உணவு பிரியரான இவரை, யூடியூபில் மட்டும் பத்து இலட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவரது சேனலில் பல வகையான உணவுகளை கிலோ கணக்கில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு இவர் பிரபலமடைந்தார். இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் வசிக்கும் இவர், சித்த மருத்துவம் படித்துவிட்டு கடந்த 28 வருடங்களாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  

சித்த மருத்துவம் படித்த இவர், போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக சார் ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போலி மருத்துவம் பார்த்து வந்த சாப்பாட்டு ராமனை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும், கிளினிக்கில் வைத்திருந்த ஊசிகள், மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் வழக்குபதிவு செய்த போலீசார், சாப்பாட்டு ராமனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.