ஆவினில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு செய்யப்படும்.! -அமைச்சர் நாசர் தகவல்.! 

ஆவினில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு செய்யப்படும்.! -அமைச்சர் நாசர் தகவல்.! 

ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு நடத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் நாசர், ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவு கூறினார்.  

மேலும், ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதற்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளதாகவும், பால் கொள்முதல் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,அந்த பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.