அழைப்பைத் துண்டித்து நகராட்சி ஆணையர் தன்னை அவமதித்துவிட்டார்: முன்னாள் அமைச்சர் தங்கமணி குமுறல்...

அழைப்பைத் துண்டித்து நகராட்சி ஆணையர் தன்னை அவமதித்துவிட்டார்:  முன்னாள் அமைச்சர் தங்கமணி குமுறல்...

 அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது குறித்து விசாரிக்க தொடர்பு கொண்டபோது, அலட்சியமாக பதிலளித்ததுடன் அழைப்பைத் துண்டித்து நகராட்சி ஆணையர் தன்னை அவமதித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை அதிகப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, கொரோனா நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தி தர நாமக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக  தெரிவித்தார்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோரும் இணைந்து மக்களுக்காக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திருச்செங்கோடு பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது குறித்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையரிடம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அலட்சியமாகப் பதிலளித்து எனது அழைப்பைத் துண்டித்து விட்டார். திருச்செங்கோடு ஆணையர் மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்திவிட்டார். இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளோம்' என்றார்.