ஈபிஎஸ்க்கு இருக்கும் இறுதி நம்பிக்கை..! சொந்த ஊர் கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு..! இன்று இறுதி தீர்ப்பு..!

ஈபிஎஸ்க்கு இருக்கும் இறுதி நம்பிக்கை..! சொந்த ஊர் கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு..! இன்று இறுதி தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது. 

ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

ஈபிஎஸ் மேல்முறையீடு:

தனி நீதிபதியின் இந்த உத்தரவு ஓபிஎஸ்க்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது. அனைவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்துவோம் என ஓபிஎஸ் அழிப்பு விடுத்துக் கொண்டு இருந்த அதே நேரத்தில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் தங்களின் தரப்பு வாதத்தையும் கேட்டுவிட்டு தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தரப்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

மேலும் படிக்க: கொடநாடு வழக்கில் விசாரணை...திமுகவில் இணைய முடிவு...அதிமுக நிர்வாகி கொடுத்த ஷாக்!

விசாரணை:

இந்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 23 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இருதரப்பினரும் நேரடியாக மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

1 மணி நேரம்:

இன்றைய விசாரணையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் தங்கள் பக்க வாதத்தை வைக்க தலா ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நேரத்திற்குளாக தங்களின் நியாயத்தை அவர்கள் கூறவேண்டும் என்பதால், இரு தரப்பினரும் அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஒரு மணி நேரம் தான் வழக்கின் தீர்ப்பை எழுத இருக்கிறது.

ஈபிஎஸ்க்கு சிக்கல்:

கட்சியும், நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கட்சி விதிகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு சாதகமாவே இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதனால் சட்ட தீர்ப்புகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு சாதகமாகவே வரும் எனவும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

மேலும் படிக்க: அருவருக்கத்தக்க குணம்..! கடவுளே நினைத்தாலும் தண்டனை நிச்சயம்..! - டி.டி.வி.தினகரன்

அணி மாறும் நிர்வாகிகள்:

அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்து பல நிர்வாகிகள் ஈபிஎஸ் அணிக்கு தாவினர். தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் ஈபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தற்போது மீண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளது. 

அதிமுகவில் பல குழப்பங்கள் சென்று கொண்டு இருக்கும் இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தர இருக்கும் இன்றைய தீர்ப்பு அதிகம் எதிர்க்கப்டும் ஒன்றாக உள்ளது.