அண்ணாமலை - ஆளுநர் சந்திப்பு..! அது தான் காரணமா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆளுநர் - திமுக:
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் தொடர்ந்து இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் பேசுவதை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் திமுக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 7 தமிழ்ர்கள் விடுதலை, நீட் தேர்வு ரத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்றவற்றை கிடப்பில் வைத்திருப்பதிலும் அதிருப்தி நிலவி வருகிறது.
ஆளுநர் vs எதிர்க்கட்சிகள்:
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுவும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆளுநரும் எதிர்க்கட்சிகளும் இணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஆளுநர் - ஈபிஎஸ்:
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்க்கு பின் திமுக குறித்து குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டிருந்தார் ஈபிஎஸ். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார் ஈபிஎஸ். மேலும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் புகார் அளித்ததாகக் கூறப்பட்டது. மேலும் அதிமுக உட்கட்வி விவகாரம் குறித்து ஈபிஎஸ் பேசியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆளுநர் - அண்ணாமலை:
இந்த நிலையில் இன்று ஆளுநருடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. ஆளுநரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் அதை அரசு இது வரை தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அளுநர் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சிலவற்றை ஆராயவேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தொடர்ந்து ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை:
மேலும், தமிழ்நாடில் செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. நேரு விளையாட்டரங்கில் பிரதமர் பங்கேற்ற விழாவில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை என குற்றம்சாட்டிய அண்ணாமலை, பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத இந்த அரசு சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும். பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய அரசு முகமை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அனைத்து கோயில்களிலும் மெட்டல் டிடெக்டர் வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவாதங்கள்:
இவை மட்டும் அல்லாமல கோவை கார் வெட்ப்பு சம்பவம் தொடர்பாகவும் அண்ணாமலை ஆளுநரிடம் பேசி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பாஜகவில் சமீபத்தில் நடந்த திருச்சி சூர்யா - டெய்சி சர்ச்சை ஆடியோ தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.