அதானியை வைத்து கொள்ளையடித்து வரும் பெரிய ஊழல்வாதி பாஜக தான் - வசீகரன் விமர்சனம்!

அதானியை வைத்து கொள்ளையடித்து வரும் பெரிய ஊழல்வாதி பாஜக தான் - வசீகரன் விமர்சனம்!
Published on
Updated on
1 min read

அதானியை வைத்து கொள்ளையடித்து வரும் பெரிய ஊழல்வாதி  பிரதமர் மோடி தான் என்று தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமன் அனுப்பி விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது. 

இதனை கண்டிக்கும் வகையில் சென்னை தியாகராய நகர் பெரியார் சிலை அருகில் ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையில் தொண்டர்கள் பாஜக மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், அதானியை வைத்து கொள்ளையடித்து வரும் பெரிய ஊழல்வாதி  பிரதமர் மோடி தான் என்று கூறினார். அதேபோல், தமிழ்நாட்டில் ரஃபேல் வாட்ச்சை வைத்து பாஜக விளையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  இந்தியாவின் அடுத்த பிரதமராக கெஜ்ரிவால் ஆகப்போவதை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, பொய்யான ஊழல் குற்றசாட்டுக்களை வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com