ச்சீ,இப்படியுமா இருப்பார்கள்,.கொரோனா நோயாளிகளை ஏமாற்றியதாக 600 வழக்குகள் பதிவு.! 

ச்சீ,இப்படியுமா இருப்பார்கள்,.கொரோனா நோயாளிகளை ஏமாற்றியதாக 600 வழக்குகள் பதிவு.! 

போலி ரெம்டெசிவிர், மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கீடு போன்ற கொரோனா நோயாளிகள் ஏமாற்றப்படுவது தொடர்பாக டெல்லியில் இதுவரை 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் படுமோசமாக உள்ளது. இதனால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதன் விளைவாக பல நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் திண்டாரும் நிலை ஏற்பட்டது. அதேநேரம் கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிருக்கும் நாடு முழுவதும்  கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. 


இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலி ரெம்டெசிவிர் விற்பனை, மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க பணம் பறித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் பலர் ஈடுபட தொடங்கினர். இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தொடங்கிய நிலையில் கொரோனா நோயாளிகள் ஏமாற்றப்படுவது தொடர்பாக டெல்லியில் மட்டும் 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.