சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அஜினாதேவி சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அஜினாதேவி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
தாம் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தமது மகள் சாவுக்கு காரணமானவரை கண்டுபிடித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் விமலா கண்ணீர் மல்க கூறினர்.