கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது.! -நீதிமன்றம் உத்தரவு.!

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. அதன் பின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து தாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசாணையில் கையெழுத்திட்டார். மேலும் அது இரண்டு தவணையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. 2000 ரூபாய் வழங்கப்பட்ட பையில் அரசின் ஆளும்கட்சியின் சின்னம் எதுவும் இடம்பெறாத நிலையில் சில இடங்களில் ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் ரேஷன் கடைகளில் நிவாரண உதவிகள் வழங்கும் போது உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது என்றும், ரூ.4000 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது என்றும், உதவித்தொகை வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது.! -நீதிமன்றம் உத்தரவு.!