மாநகராட்சி கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் அதிகாரியுடன் வாக்குவாதம்!

மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது மாநகராட்சியின் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த தனபால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடுவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதில் ஊழல் நடந்துள்ளதால் மாநகராட்சி ஆணையர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

மாநகராட்சி கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் அதிகாரியுடன் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் இன்று மாநகராட்சி மேயர்  இளமதி தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சிக் கூட்டம்

கூட்டத்தில் துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மற்றும் 48 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது மாநகராட்சியின் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த தனபால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடுவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதில் ஊழல் நடந்துள்ளதால் மாநகராட்சி ஆணையர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து. தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி மாநகராட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் கடைகள் ஏலம் விடப்பட்டதாகவும் இதில் எந்த ஊழலும் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தார். இதனை ஏற்காத தனபால் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

துணை மேயர் குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து துணை மேயர் ராஜப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக 34 கடைகள் கட்டப்பட்டது அந்த கடைகள் மாநகராட்சி சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார் பாஜக மாமன்ற உறுப்பினர் தனபால் மாமன்ற கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் கூறித்து பேசுவதில்லை. 

அரசியல்  கால்புணர்ச்சியாகவே பேசி வருகிறார். மாமன்ற கூட்டத்தில் குழப்பம் விளைவித்து வருகிறார். கடையில் ஏலம் விட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்வதாக குற்றம் சாட்டினார். இவர் கடை ஏலத்தில் கையூட்டு எதுவும் பெற முடியுமா என எதிர்பார்த்து தான் மாமன்ற கூட்டத்தில் பிரச்சனை எழுப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.