திமுக ஆட்சிக்கு வந்தாவே பவர் கட் தானா? குஷ்பூ டிவீட்

திமுக ஆட்சிக்கு வந்தாவே பவர் கட் தானா? குஷ்பூ டிவீட்

திமுக ஆட்சி என்றாலே இப்போது வரை பலர் விமர்சனம் செய்வது 2006-2011  வரை இருந்த மின்சார தட்டுப்பாட்டை தான். ஒரு நாளுக்கு 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை கட்டாயம் மின்தடை இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போது கூட அதிமுக இதை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததும் இனி தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்காது என்றும் சிலர் கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி எந்த இடங்களில் மின்தடை ஏற்பட்டது என்பதை தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


தற்போதைய நிலையில் சில இடங்களில் திடீர் என்று மின்சாரம் தடை படுவதும் பின் உடனே அது சரிசெய்யப்பட்டும் வந்தது. மின்சார துறை சார்பில் இது எப்போதும் இருப்பது தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதை குறிப்பிட்டு பாஜகவை சேர்ந்த குஷ்பூ திமுகவை விமர்சித்துள்ளார். 


இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்கள் பகுதியில் ஒருநாளைக்கு 12லிருந்து 15 முறை பவர் கட் ஆகி, கட் ஆகி வருகிறது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதனால் ஒருசில இடங்களில் மின்சார தடை ஏற்படுகிறது என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.