ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கடத்தல்... 400 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கடத்தல்... 400 கிலோ கஞ்சா பறிமுதல்...
வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காரிப்பட்டி பகுதியில் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, ஒரு கார் மற்றும் மினி டெம்போவில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான  400 கிலோ அளவிலான கஞ்சா  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், கார் மற்றும் மினி டெம்போவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.