திமுக அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது... கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம்

எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் இவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என காயத்ரி கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது... கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம்
திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் காயத்ரி ரகுராம், சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக  திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதுகுறித்து பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஜனநாயகம் எங்கே போனது?
 
உதயநிதி ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசம்போதும், மு.க.ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசும்போதும், திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள், தற்போது அவர்கள் தேவேந்திர குல வேலாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.
 
எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், , பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் இவர்கள் (திமுகவினர்) மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஏன் தனி நபர்கள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள்? சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தானா?
 
திமுகவை விரும்ப வேண்டும், திமுகவை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அது போன்ற ஒரு சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது. நீங்கள் எந்த வகையில் பேசுகிறீர்களோ, அதைத் தான் திரும்பவும் எதிர்பார்க்க வேண்டும். உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா? திமுக அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது” இவ்வாறு தனது கண்டனத்தை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.