நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு பொறுப்பேற்றது முதல் திமுக தூரிதமாக மக்கள் பணிகளை செய்து வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அனைத்து துறைகளிலும் அமைச்சர்கள் மிக சிறப்பாக மக்கள் பணிகளை செய்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக செம ஆக்டிவ்வாக இருப்பவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய நண்பர் என நாயை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில்,
நேற்று கோட்டையை விட்டு வெளியேறும்போது நாய் ஒன்று 3 கால்களுடன் நடந்து வந்ததை கவனித்ததாகவும்,
கடமையில் இருக்கும் போலீசாருடன் மிகவும் நட்பாக அந்த நாய் நடந்திக்கொண்டாகவும், கார் விபத்தில் அந்த நாயின் வலது பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். மேலும் இன்று பிரியாணி நாளை அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்து, இது என்னுடைய புதிய நண்பன் என பிடிஆர் டுவிட்டரில் அறிமுகப்படுத்தினார்.
இவரின் இந்த போஸ்ட்க்கு பல்வேறு கமெண்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது. முல்லை தேர் குடுத்தான் பாரி... கால் அடிப்பட்ட நாய்க்கு பிரியாணி தந்தார் எங்கள் நிதி அமைச்சர் PTR என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்ஸ் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.