அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
Published on
Updated on
1 min read

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 

தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com