புதிதாக 10 அரசு கலை  அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்  - அமைச்சர் பொன்முடி

புதிதாக 10 அரசு கலை  அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி

வரும் கல்வியாண்டில் புதிதாக 10 அரசு கலை  அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.
Published on

சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலுரை வழங்கிய அமைச்சர் பொன்முடி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது கிராமப்புற மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 1,000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் பொன்முடி குறிப்பிட்டார்.

அரசுக் கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 166.5 கோடி மதிப்பில் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று பொன்முடி அறிவித்தார்.

மேலும் 2016-17ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 199.36 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும் பொன்முடி கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com