தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 2500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.! அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!  

தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 2500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.! அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!  

கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த 2500 குழந்தைகள் தமிழகத்தில் உள்ளனர் என்று  அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி கோவில்பிள்ளை விளை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி மையம் கட்டிட பணியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் தன்னை வெற்றி பெற வைத்ததற்கு அப்பகுதி பொதுமக்களிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அமைச்சரிடம் அடிப்படை பிரச்சனைகளான வீட்டு மணை பட்டா, தெருச்சாலை வசதி, சுடுகாடு சாலை, மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை செய்து தர கோரி பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். அதை பெற்றுக்கொண்ட அமைச்சர் அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் செய்திகளை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக வைக்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்படும் என்றும்,  அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் கூறினார். 

மேலும்  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார் என்று கூறிய அவர், தற்போது எல்லா மாவட்டத்திலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2500 க்கும் மேல் ஒரு தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் 75 குழந்தைகள் தாய் - தந்தை  என இருவரையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, மாதம் ரூபாய் 3 ஆயிரம் அவர்களது பாதுகாவலருக்கு பராமரிப்பு செலவிற்கு வழங்குவதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், இதில் அரசு காப்பகத்தில் வைத்து அவர்களுக்கு உதவி செய்து கல்லூரி படிப்பு வரை அவர்கள் படிப்பதற்கு அரசு உதவி செய்யும் என்ற அவர், தாய் அல்லது தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களது தந்தை அல்லது தாய் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்குப்படும் எனக் கூறினார்.