வரதமாநதி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு...! விவசாயிகள் மகிழ்ச்சி..!

பழனியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் வரதமாநதி நீர்த்தேக்கத்திற்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வரதமாநதி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு...! விவசாயிகள் மகிழ்ச்சி..!
Published on
Updated on
1 min read

பழனியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் வரதமாநதி நீர்த்தேக்கத்திற்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வரதமாநதி நீர்தேக்கத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கியது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி நீர்த்தேக்கம், ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டியிருந்தது. 

இந்த நிலையில் வரதமாநதி நீர்தேக்கத்தை  ஒட்டியுள்ள இடங்களில் நேற்று இரவு 40 மில்லிமீட்டர் அளவு மழை பொழிந்துள்ளது. தற்போது நீர்தேக்கத்திற்க்கு 628 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே அளவு  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வாய்க்கால்கள் வழியாக ஆயக்குடி பகுதியில்  உள்ள பெரியகுளம், பாப்பன்குளம், வீரகுளம் மற்றும் சண்முகநதி ஆற்றிலும் தண்ணீர் செல்கிறது. அதேபோல பழனியில் உள்ள மற்ற அணைகளான பாலாறு- பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகரித்து  வருகிறது. விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com