கொரோனா பரவல் அதிகரிப்பு: இடமாற்றம் செய்யப்படும் மீன்கடைகள்!?  

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள மீன் சந்தைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு: இடமாற்றம் செய்யப்படும் மீன்கடைகள்!?   

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள மீன் சந்தைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னையில் உள்ள மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள மீன் சந்தைகளை தற்காலிக இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், மொத்த வியாபாரிகளை மட்டும் சந்தைகளில் அனுமதிப்பது  தொடர்பாகவும்,மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்வ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னையில் உள்ள முக்கிய மீன் சந்தைகளான காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, பட்டினம்பாக்கத்தில் உள்ள கடைகளை மாற்று இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது..அதேப்போல், சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மீன் சந்தைகளில் அனுமதிக்காமல், மொத்த வியாபாரிகளை மட்டும் வழிகாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.