இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி இளைஞர் அமைப்பினர் நூதனப் போராட்டம்,..! 

இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி இளைஞர் அமைப்பினர் நூதனப் போராட்டம்,..! 

கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் டீசல் விலை  உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.  

 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சாஎண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டிய நிலையிலும் பெட்ரோல் விலை 65 ரூபாயாகவே இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே கச்சாஎண்ணெய் விலை கடுமையாக குறைந்துவந்த நிலையிலும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை  உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.