வேலைக்காக வெளிநாடு சென்றது குற்றமா.? விமானநிலையம் சென்றவரை கைது செய்த போலீசார்,.!

வேலைக்காக வெளிநாடு சென்றது குற்றமா.? விமானநிலையம் சென்றவரை கைது செய்த போலீசார்,.!
Published on
Updated on
1 min read

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்று திரும்பியவரை குடியுறிமை அதிகாரிகள் கைது செய்து விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.

சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோகா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு  விமானம் நேற்று இரவு புறப்பட தயாரானது.அந்த விமானத்தில் பயணம் செய்யவந்த பயணிகள் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த கிரி(45) என்பவா் அந்த விமானத்தில் வேலைக்காக கத்தாா் நாட்டிற்கு  செல்ல வந்தாா்.அவருடைய பாஸ்போா்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கத்தாா் நாட்டிற்கு சென்றுவிட்டு,அங்கிருந்து,இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்று வந்திருந்தது தெரியவந்தது.

ஏமன்,லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக  இந்தியா்கள் செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதை மீறி செல்பவாகள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.ஒன்றிய அரசின் அந்த உத்தரவு தற்போது வரை  நடைமுறையில்  உள்ளது.

எனவே பயணி கிரி,இந்திய அரசின் உத்தரவை மீறி,ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளதால்,குடியுறிமை அதிகாரிகள் கிரியிடம் நீண்ட விசாரணை நடத்தினா்.கத்தாரில் நான் பணியாற்றிய  நிறுவனம் என்னை ஏமனுக்கு அனுப்பியதால் சென்றேன் என்று கூறினாா்.ஆனால் குடியுரிமை அதிகாரிகள்,பயணியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிரியின் பயணத்தை ரத்து செய்தனா்.அதோடு அவரை கைது செய்து,மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் கிரியிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com