காலிப்பணியிடங்கள் இரண்டு மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் - மா.சுப்பிரமணியன்!

களப்பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காலிப்பணியிடங்கள் இரண்டு மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் - மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்றைக்கு முன் தினம் ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்றிலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் மூன்றுக்கும் அதிகமான காய்ச்சல் உள்ளவர்கள் இருக்கிற இடத்தை கண்டறிந்து அங்கே சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைக்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது.

வழக்கமான பருவநிலை மாற்றத்தாலான காய்ச்சல்

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த காலங்களில் இந்த பருவநிலை மாற்றங்களின் போது வருகிற அந்த காய்ச்சல் தான் இப்போதும் இருக்கிறது என்றாலும் இதை தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டுதலின்படி சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

நேற்றைக்கான ஒட்டுமொத்த பாதிப்பு 442 இதில் 7 பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் மீதம் தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ஒரு மூன்று நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு என்று இருந்தால் மட்டுமே அதற்கு போதுமானதாக போதுமான தீர்வாக இருக்கும் என்கின்ற வகையில் இது கட்டுக்குள் தான் இருக்கிறது.

முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டை பொறுத்தவரை 4,308 மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் பணி நியமனங்கள் என்பது இப்போது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான நேர்காணல் தேர்வு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலங்களில் தமிழகத்தில் அந்த காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்ப்படும்

 

 

.