அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்.... சசிகலா அளித்த பதில்!!

அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்.... சசிகலா அளித்த பதில்!!
Published on
Updated on
1 min read

அதிமுக யாரிடம் சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு தொண்டர்களிடம் கேட்டாள் சரியான பதிலை கூறுவார்கள்.

திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  சொகுசு விடுதியில் விகே.சசிகலா, தனது உறவினர்களோடு தங்கியிருந்தார்.  அப்போது சசிகலாவை ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் 20க்கும்  மேற்பட்டோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பின்னர் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்ட, சசிகலாவிடம் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளை பேசும் இடம் எனவும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம் எனவும் கூறிய அவர் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இதனை அதிமுக தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகையில் ஓபிஎஸ் தரப்பினர் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com