தமிழகத்தில் திறக்கப்பட்டன தொழிற்பயிற்சி பள்ளிகள்.! 

தமிழகத்தில் திறக்கப்பட்டன தொழிற்பயிற்சி பள்ளிகள்.! 

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு ஐடிஐ  மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, தொழில் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐக்கள் மற்றும் தொழிற்பள்ளிகள் ) தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் இன்று முதல் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது

ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் சுழற்சி முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தமிழக அரசு அனுமதி. பயிற்சி மையத்தில் உள்ளே வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கை கழுவுதல் முக கவசம் அணிதல் உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.