ரத்து செய்யப்பட்ட பேரூராட்சித் தேர்தல்...மீண்டும் நடைபெற்றது!

ஒன்பது வாக்குச் சாவடி மையங்களில் வாக்கு பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்றது.

ரத்து செய்யப்பட்ட பேரூராட்சித் தேர்தல்...மீண்டும் நடைபெற்றது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்ட தாகவும்நெறிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதை எதிர்த்து ஒன்று, இரண்டு மற்றும் 11 வது வார்டுகளில் போட்டியின்றி தேர்வு பெற்ற  வார்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரணை நடத்திய நீதிமன்றம் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றது செல்லும் என்றும், மீதமுள்ள ஒன்பது வார்டுகளுக்கு  முந்தைய வேட்பாளர் இறுதிப் பட்டியலின்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி ஒன்பது வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

மறுதேர்தல்

23 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஒன்பது வாக்குச் சாவடி மையங்களில் வாக்கு பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு  பெற்றது.மொத்தம் உள்ள 2470 வாக்கில்  1598 வாக்குகள் பதிவாகி இருந்தன. 775 ஆண்களும், 823 பெண்களும் தங்களது வாக்கினை செலுத்தி இருந்தனர்

மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதை எடுத்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலிருந்தும் வாக்குப்பதி இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.