பாஜகவின் ஊழல் பட்டியல் பெரிது-கார்த்திக் சிதம்பரம்!

பாஜகவின் ஊழல் பட்டியல் பெரிது-கார்த்திக் சிதம்பரம்!

ராகுல் காந்தி நடைபயணத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும், கட்சி பலம் பெறும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரத்திற்கு வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்த காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள காந்தி மண்டபத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு கார்த்திக் சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் கட்சி காணமால் போய்விடும் என்று அமித்ஷா கூறுவது அதைப்பற்றி அவர்கள் கற்பனை செய்து கொள்ளலாம், அதற்கும் யாதர்த்திற்கும், உண்மைக்கும் வித்தியாசம் உண்டு.

காங்கிரஸ் வலு பெறும்

காங்கிரஸ் கட்சி போன்ற தேசிய கட்சி மக்களை சந்திப்பது நல்ல விஷயம், ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும், கட்சிக்கு பலம், பொது மக்கள், தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கட்சி தலைமைக்கு கிடைக்கும்,கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள முடியும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன பாதிப்புகள் சமுதாயத்திற்கு வந்துள்ளது என்பதனை எடுத்த சொல்ல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும், காங்கிரஸ் கட்சியில் பிரிவுகள் கிடையாது, காங்கிரஸ் கட்சி ஒன்றுமையாக தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக கட்சி என்றும், கட்சிக்குள் போட்டி, கருத்துக்கள் இருந்தாலும் கட்சி ஒற்றுமையாகதான் இருக்கிறது. 7ந்தேதி நடைபெறும் ராகுல்காந்தி நடைபயணத்தினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருந்து வெற்றிகரமாக முடிக்கும்.தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் யார் வேண்டும் என்றாலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கட்சி தெளிவாக கூறியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து போதை பொருள் வருகிறது

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடக்கும். அது யார் என்பதை பொறுத்து இருந்தது தான் பார்க்க வேண்டும்.தமிழகத்தில் போதை பொருள் உற்பத்தி கிடையாது, விற்பனையாகிறது. வெளிநாடுகளில் இருந்து முந்தரா துறைமுகம் வழியாக போதை பொருள்கள் இந்தியாவிற்குள் வருகிறது.

முந்தரா துறைமுகம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.உலகின் 3 ஆவது பணக்காரர் என்று சொல்லப்படும் அதானி கட்டுபாட்டில் இருக்கும் துறைமுகம் வழியாக தான் போதை பொருள்கள் வருகிறது என்று கூறுகிறார்கள்.

வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா?

அண்ணமாலை ஒழுங்காக விசாரணை செய்து விட்டு பதில் கூற வேண்டும், அரசியலுக்காக மேலோட்டமாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மக்கள் வங்கி கணக்கில் ரூ 15 லட்சம் வந்து விட்டதா ? பா.ஜ. க அரசு மாயையில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது.பாஜக ஊழல் பட்டியலை போட வேண்டும் என்றால் நிறைய பட்டியல் இருக்கிறது.

பி.எம்.கேர் நிதி என்பதனை கொண்டு வந்துள்ளனர். அதில் யார் ?  இதுவரை பணம் கொடுத்துள்ளனர் என்ற விபரங்கள் இல்லை அந்த நிதி எதற்கு செலவாகிறது என்ற விபரமும் இல்லை என்றும், தேர்தலுக்காக கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். இதுவரைக்கும் பா.ஜ.கவிற்கு நிதி கொடுத்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும்.

லட்சக்கணக்கான ரூபாய் கடனை ரத்து செய்துள்ளார்கள், யாருக்கு ரத்து செய்துள்ளார்கள் என்பதனை பார்க்க வேண்டும். அத்தனையும் பா.ஜ.க நெருக்கமானவர்கள் தான் ரத்து செய்துள்ளனர் என்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கு பேசுவதை இன்று பார்த்து இருக்கிறேன். பிரதமர் மோடி சொந்த பணத்தில் ரேஷன் அரிசி கொடுக்கிற மாதிரி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பேசியுள்ளார்.நிதி அமைச்சர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை வருத்தமளிக்கிறது என்றார்.