இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? அனல் பறந்த பேட்டி..!

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? அனல் பறந்த பேட்டி..!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லது அல்ல எனவும், கோவை குற்றவாளிகள் குறத்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சியுள்ளார்.

7 பேர் விடுதலை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 32 ஆண்டுகளாக தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் இருந்த பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றது, கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக் கிழமை மீதி 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 

Rajiv Gandhi assassination case: TN to send reminder to Governor on lifers'  release || Rajiv Gandhi assassination case: TN to send reminder to Governor  on lifers' release

நேரு பிறந்தநாள்:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: நளினியின் முதல் செய்தியாளர் சந்திப்பு...பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் மர்மம் என்ன?!!...

மோசமான நிலைக்கு இந்தியா:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பெருமைப்பட வேண்டிய நாள். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி அவர். விவசாயம், பொருளாதார, வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கை தான் காரணம்.நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால்இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை போல் மோசமான நிலைக்கு வந்திருக்கும்.

Image

வெளியே உலாவ விடுவது தவறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ் அழகிரி,
கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Coimbatore car blast case: UAPA invoked against accused | The News Minute

கூட்டணி வேறு, கொள்கை வேறு:

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம் என்றார். 

No difference of opinion between DMK, Congress: KS Alagiri- The New Indian  Express

அழுத்தம் கொடுக்க முடியாது:

சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய கோரி திமுக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திவீர்களா? என்ற கேள்விக்கு, கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என கே.எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.