நெல்லை அணைகளில் குறைந்தளவு நீர்இருப்பு...! கார் சாகுபடி நடைபெறுமா ?... விவசாயிகள் கவலை...!

நெல்லை அணைகளில் குறைந்தளவு நீர்இருப்பு...!  கார் சாகுபடி நடைபெறுமா  ?... விவசாயிகள் கவலை...!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு அணை, மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை ஆகிய அணைகள் உள்ளன. இந்த அணைகள் நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்பட தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

 இந்த அணைகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டு தோறும் ஜூன் 1 -ந் தேதி அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை .இதனால் விவசாயத்திற்கு இன்று தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இன்றைய நிலவரப்படி உச்சநீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 29.65 அடியாகவும், உச்சநீர் மட்டம் 156 அடி கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 48.88 அடியாகவும் உச்ச நீர்மட்டம் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 62.05 அடியாகவும் குறைவாக உள்ளது.

ஜூன் 1 -ந் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தால் விவசாயம் செழிப்பாகும் மழை நன்றாக பெய்யும் என்பது அப்பகுதியில் விவசாய மக்களின் ஐதிகமாக உள்ளது. ஆனால் இன்று விவசாயத்திற்கு என அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கார் பருவ சாகுபடி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com