100 அடி பனையில் மது அருந்திய போதை பிரியர் - நீண்ட போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு

100 அடி பனையில் மது அருந்திய போதை  பிரியர் - நீண்ட போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த செமனாம்பதி பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லக்ஷ்மணன் வயது 45 இவர் ஆனைமலை சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அந்த பணத்தை வைத்து மது அருந்திவிட்டு ஆங்காங்கே தங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார் .

ஆனைமலை அடுத்த ஜமீன் கோட்டாபட்டி பிரிவு அருகே மது அருந்திவிட்டு இடுப்பில் ஒரு கோட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு அருகே இருந்த  100அடி உயரமுள்ள பனை மரத்தில் மது போதையில் ஏறியுள்ளார்.
பனைமரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடுப்பில் இருந்த ஒரு கோட்டர் பாட்டிலை மரத்தில் இருந்தபடியே அருந்தியுள்ளார்

இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் பனை மரத்தின் உச்சியிலேயே மயங்கி விட்டார்

இதனை பார்த்த இப்பகுதி மக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் மது போதையில் இருந்த இவரை கயிறு கட்டி இறக்குவது முடியாத காரியம் என கருதி உடனடியாக  கிரேன் வரவழைத்து கிரேன் உதவியுடன் மது பிரியர் லட்சுமனை மூன்று மணிநேர  நேரம் போராட்டத்துக்குப் பிறகு மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் துரிதமாக செயல்பட்டு  மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மது பிரியர் 100  அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மயங்கி இருந்த சம்பவம் இப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் இங்கு போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com