பாணாவரம் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்த ரவிக்குமாாின் மனைவி காமாட்சிக்கும், பாணாவரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயபிரகாஷுக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
ரவிக்குமார் வேலைக்கு சென்றதை அறிந்த கள்ளக்காதலன் ஜெயபிரகாஷ், காமாட்சியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காமாட்சியின் வயிற்றில் குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்த அவரை, மீண்டும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த காமாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெயபிரகாஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.