திமுகவை ஆதரிக்கிறாரா ஓபிஎஸ்...முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

திமுகவை ஆதரிக்கிறாரா ஓபிஎஸ்...முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அதிமுகவை எதிர்த்து தோற்கடித்து ஆட்சிக்கு வந்த திமுகவை எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கிறார். ஓபிஎஸ் மறைமுகமாக திமுகவை ஆதரிக்கிறார் இதற்கு தான் அதிமுக தொண்டர்கள் கோபப்படுகிறார்கள் என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மற்றும் கூத்தாநல்லூரில் அதிமுகவின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் மற்றும்   தகவல் தொழில்நுட்ப அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ் திமுகவிற்கு ஆதரவா?

இக்கூட்டத்தில் இறுதியாக பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் அதிமுகவிற்கு தேய்மானம் இருக்கிறது என்று யாராலும் சொல்லமுடியுமா? வளர்பிறை போல வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய இயக்கம் அதிமுக. அதிமுகவை எதிர்த்து தோற்கடித்து ஆட்சிக்கு வந்த திமுகவை எடப்பாடிபழனிச்சாமி எதிர்க்கிறார். ஓபிஎஸ் மறைமுகமாக திமுகவை ஆதரிக்கிறார், இதற்குதான் அதிமுக தொண்டர்கள் கோபப்படுகிறார்கள். இந்த கோபத்தை நியாயம் இல்லை என்று யாராலும் சொல்லமுடியுமா எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களின் ஆவி மதிக்குமா என்று பேசினார்.