மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுகம் அமைவது குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்ட சட்டமன்ற உறுப்பினர்!

மரக்காணம் பகுதிக்கு உட்பட்ட 19 மீனவ கிராமங்களில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் மூழ்கி மாயமாவதால் உடனே மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் வைத்து வருகின்றனர்.

மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுகம் அமைவது குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்ட சட்டமன்ற உறுப்பினர்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் அழகன் குப்பம் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்க இருந்தன. இந்நிலையில் இப்பகுதியில் மீன் பிடித்து துறைமுகம் அமைந்தால் கடல் வாழ் உயிரினமான ஆமை இனங்கள் முற்றிலும் அழிந்து விடும் என்று தனி நபர் ஒருவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் தற்காலிகமாக துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

மரக்காணம் பகுதிக்கு உட்பட்ட 19 மீனவ கிராமங்களில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் மூழ்கி மாயமாவதால் உடனே மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 27 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனால் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் அழகன் குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களிடம் மீன்பிடி துறைமுகம் அமைவது குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.