சென்னையில் நோயாளிகள் குறைவு... படுக்கைகளும் காலியாக இருக்கிறது...ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்ல.. மா.சுப்ரமணியன் மகிழ்ச்சி!!

சென்னையில் நோயாளிகள்  குறைவு... படுக்கைகளும் காலியாக இருக்கிறது...ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்ல..  மா.சுப்ரமணியன் மகிழ்ச்சி!!

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகளுக்கான தேவை குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ள 2 ஆயிரத்து 386 வீடுகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், 
சென்னையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளன என்றும், எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், 
6 ஆம் தேதி அன்று தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.