அமைச்சர் அன்பில் மகேஷுக்குமா? சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி..!

அமைச்சர் அன்பில் மகேஷுக்குமா? சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

காய்ச்சல்:

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் காய்ச்சல் மற்றும் சளியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிகள் விடுமுறை:

இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. புதுவையில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தது. ஆனால் அந்த அளவிற்கு காய்ச்ச தீவிரம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு பரவி வரும் காய்ச்சல்..! அலட்சியம் வேண்டாம்..!

அன்பில் மகேஷ்:

இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடித்த பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்படவே, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

H1N1 :

அங்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரல் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.