எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதற்காக தான் பேசினாரா? 

எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதற்காக தான் பேசினாரா? 

சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மற்றும், கல்வியாளர்களுடனான கூட்டம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.

அந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவுடன் காணொலிக் காட்சி மூலமாக இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணிவரை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர்  மிகக் குறுகிய காலகட்டத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் நாங்கள் உடனடியாக இதில் முடிவை மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சினையை முதலமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார் எனக் கூறினார்.

மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமல் போனால் உயர் கல்விக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள், அங்கு எந்த மதிப்பெண்ணை காட்டுவார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன. நீட் தேர்வு நடந்தால், அதில் பயிற்சி எடுத்தவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்களா என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இப்போதைக்கு 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பதற்கான கருத்து மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். 

அதோடு நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விடுவதில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்ற அவர், சட்டமன்றம் கூடும்போது இது குறித்து முதலமைச்சர் நல்ல தீர்வை எடுப்பார் எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கும் அடிப்படையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் தொலைப்பேசியில் பேசியதாக தெரிவித்தார்.