பால் விலை உயர்வு அனைவருக்கும் இல்லையாம் - அமைச்சர் விளக்கம்!

பால் விலை உயர்வு அனைவருக்கும் இல்லையாம் - அமைச்சர் விளக்கம்!

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.12 விலை உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு அனைவருக்கும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

விலை உயர்வு:

ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

Chennai: Await milk with a message in wise Kural couplets

ஆரஞ்சு பால் பாக்கெட்:

இந்த விலை உயர்வினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய அரஞ்சு நிற பால் ஒரு லிட்டருக்கு ரூ.12 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.60 க்கு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. நீலம் மற்றும் பச்சை பால் பாக்கெட்டுகளின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் படிக்க: தொழிற்சாலையில் அமைச்சர் திடீர் ஆய்வு...முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணி நீக்கம்!

அட்டைதாரர்களுக்கு மாற்றமில்லை:

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும் எனவும், சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் பால் மட்டுமே 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Aavin milk card holders face difficulties in renewing monthly milk cards –  MYLAPORE TIMES

அமைச்சர் நாசர் விளக்கம்:

அதிமுக ஆட்சி காலத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 வரை குறைத்து நடவடிக்கை எடுத்தார். தற்போது தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை ரூ.10 வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.