வேலைவாய்ப்புக்குத் தனி அமைச்சகம்- அமைச்சர் பொன்முடி!

தொழிற்சாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொடுப்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது

வேலைவாய்ப்புக்குத் தனி அமைச்சகம்- அமைச்சர் பொன்முடி!

தனியார் நிதி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கினார். 

தனி அமைச்சகம்

இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 300 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் இன்று வேலைவாய்ப்பை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி  வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.  

தொடர்ந்து பேசிய அவர், பட்டப் படிப்புகளை படித்து விட்டு எண்ணற்ற மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில் இதனை மாற்றி அமைக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வேலைவாய்ப்புக்கான தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார்.

நான் முதல்வன் திட்டம்

தொழிற்சாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொடுப்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் கூறினார். இது போன்ற நிறுவனங்கள் படித்த பட்டதாரி மாணவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.