பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.! முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை.! 

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.! முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை.! 

திருவெண்ணைநல்லூர் அருகே பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க சென்றுள்ளார். அப்போது உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை சந்தித்து தாலுக்கா செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த செய்தியாளர்களுக்கான ரூ 5 ஆயிரம் சிறப்பு ஊக்கதொகயை தாலுக்கா நிருபர்களுக்கும்  வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி உயர்கல்வித்துறை அமைச்சரிடம் மனு  கொடுக்க செய்தியாளர்கள் சென்றனர்.

அப்போது மனுவை கையில் வாங்காமல்  செய்தியாளர்களை பார்த்து யோவ் உங்களால் தான் நோய் தொற்று பரவுகிறது என்றும், கிராமத்தில் வசிக்கும் செய்தியாளர்களுக்கு பணம் கொடுப்பாங்களா? தளபதி சொன்னது ன் மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டும் தான் போ.! என்று  ஒருமையில் பேசியதால் சங்கடம் அடைந்த செய்தியாளர்கள் அனைவரும் திகைத்துள்ளனர். 


ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த நிலையில்  தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியதால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். இவர்கள் மத்தியில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.