அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படி கேட்பதும் பேசுவதும் தவறு - கொந்தளித்த அமைச்சர்!

அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படி கேட்பதும் பேசுவதும் தவறு - கொந்தளித்த அமைச்சர்!

அரசு மருத்துவமனைகள் என்றாலே சாதாரணமாக குற்றம்சாட்டிவிடலாம் என்ற ரீதியில் கேள்வி கேட்பதும் பேசுவதும் தவறு என்று கொந்தளித்த அமைச்சர்.

குழந்தைகளுக்கு பரிசு:

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு புதிதாகப் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தமிழ்ச்செல்வி, தமிழ் இனியன், உதயநிதி, தமிழ் இன்பன் என்று தமிழில் பெயர் வைத்து ஆயிரம் ரூபாயை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார். 

நீட் தேர்வு மசோதா.! விளக்கம் கேட்ட மத்திய அரசு.!தமிழகத்திற்கு விலக்கு  கிடைக்குமா..? மா.சுப்பிரமணியன் பதில்

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு:

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனாவில் கொரோனா அதிகரிப்பு குறித்து கேள்விக்கு, சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு 2% ரேண்டம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அது தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதாவது கட்டுப்பாடு விதிக்கும் நிலைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Coronavirus

இதையும் படிக்க: தாய் வீட்டிற்கே திரும்புகிறாரா டாக்டர் சரவணன்... டாக்டருக்கு வந்த க்ரீன் சிக்னல்!!

என்ன வித்தியாசம்? :

மேலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எந்த அலட்சியும் இல்லை என்றும் குழந்தை இறந்தது இயற்கையாக நடந்த ஒன்று எனக் கூறிய அமைச்சர், இவ்வாறு குற்றச்சாட்டை வைத்தால் நமக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம் எனவும் அரசாங்க மருத்துவமனை என்றால் சாதாரணம் என்று நினைத்து விட்டீர்கள் என்று கொந்தளித்த அவர் எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

Minister M. Subramanian inaugurated a medical camp on the occasion of  Udayanidhi Stalin's birthday in Chennai

நீட் விலக்கு மசோதா:

தொடர்ந்து நீட் விலக்கு மசோதா குறித்து பேசிய அவர்  குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டது, அதில் சில பதில் கோரி தமிழ்நாடு அரசிடம் கேட்டனர், அதற்கும் உரிய விளக்கம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் குடியரசு தலைவர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.