சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்!

சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூா், ஜப்பானில் மேற்கொண்ட 9 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்புகிறாா்.

சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் மே 23-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூா் சென்றாா். அங்கு 2 நாள்கள் பயணம் மேற்கொண்டு, 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 

அதைத் தொடா்ந்து, மே 25 முதல் ஜப்பான் நாட்டில் பயணம் மேற்கொண்டார். டோக்கியாவில் 6 நிறுவனங்களுடன் 818 கோடி ரூபாயில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, 128 கோடி ரூபாயில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலை தொடங்க ஓம்ரான் நிறுவனத்தோடும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

சிங்கப்பூா், ஜப்பானின் 9 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் சென்னை திரும்ப உள்ளாா். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனா்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!