திரு.ராஜகோபாலனா? பாதிக்கப்பட்ட பெண் உன் மகளாக இருந்தால் என்ன செய்வ? மதுவந்தியை கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்

திரு.ராஜகோபாலனா? பாதிக்கப்பட்ட பெண் உன் மகளாக இருந்தால் என்ன செய்வ? மதுவந்தியை கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்

சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது பெரும் சர்ச்சையான நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த பள்ளியின் டிரஸ்டியாக இருக்கும் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி ஆகியோரை பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து பேசிய மதுவந்தி, தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், அங்கு கல்வியாளராக தான் இருப்பதில் தனக்கு எந்த அசிங்கமும் இல்லை என்றும், ஆசிரியர் இப்படி செய்துள்ளது தான் அசிங்கமாக இருப்பதாகவும் கூறினார். 

மேலும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பெயரை  திரு. ராஜகோபாலன் என்று மரியாதையாகவும் கூறினார்.  இதை கேட்ட சமூகவலைத்தளங்களில் இருப்பவர்கள் சரமாரியாக மதுவந்தியை விமர்சித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண் உன் மகளாக இருந்தால் என்ன செய்வ? உனக்கும், உன் அப்பனுக்கும் அந்த பள்ளிக்கும் தொடர்பு இல்லை என சொல்லிடு என ஆவேசமாக கருத்து கூறியுள்ளார் சமூக வலைதளவாசி.

உன் பாட்டி இரத்தத்தை கொடுத்து உருவாக்கிய பள்ளி என்றால் எந்த கேள்வியும் கேட்க கூடாதா? நீச்சல் குளத்தில் விழுந்து ஒரு மாணவன் இறந்தானே அதற்கு பொருப்பேத்திட்டீங்களா?
பல முறை சொல்லியும் நடவடிக்கைகள் இல்லை என்று தான் புகாரே... உங்களுக்கு பூசி மொழுகிறது கை வந்த கலை ஆச்சே என இன்னொருவர் கூறியுள்ளார். 

அதேபோல தப்பு செய்தவனுக்கு மதிப்புத் தர கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய இடத்துல காமத்தை சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணி இருக்கான் அதை தட்டிக்கேட்க யோக்கியதை இல்ல இதுல இந்த ஸ்தாபனத்தின் மேல கைய வச்சா கிழிச்சுருவ அப்படின்னு சொல்ற எல்லாரும் பொறுமையா இருக்காங்கன்னு ரொம்ப ஆடாத என ஒருவர் கூறியுள்ளார். 

மேலும் பல தடவை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் ,முதலில் PSBB school management, trust YG மகந்திரன் ,மதுவந்தியையும் தான் சிறையில் அடைக்க வேண்டும் ,டிரஸ்ட் என்றால் என்ன ,அந்த பள்ளியில் உனக்கும் சம்பந்தம் இருப்பதாக தான் அர்த்தம் என மேலும் ஒருவர் கூறியுள்ளார.